Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயுத்தொல்லைக்கு சிறந்த மருந்தாக பயன்படும் பூண்டு !!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (12:26 IST)
பூண்டை நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால் பூண்டில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது.


பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது.

தினமும் பூண்டை பயன்படுத்தி வந்தால், சளி குறைந்துவிடும். மேலும் பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் சுவாச பாதையில் ஏற்படும் தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்கிறது.

பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது. பூண்டில் உள்ள சல்பர், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

பச்சையாக பூண்டை வெறும் வயிற்றில் உண்டால், அது நம் உடலில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

பூண்டில் அடங்கியுள்ள விட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பொதுவாக பூண்டு இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தொண்டையில் ஏற்படும் எரிச்சல்களையும் குணப்படுத்துகிறது. மேலும் பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments