Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவகுணம் நிறைந்த சுண்டைக்காய் வற்றல்...!!

Webdunia
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை  பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.
 
சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
 
சுண்டைக்காய் வற்றல் தயாரிக்கும் முறை: முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின்  நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பகலில் இரண்டையும்  காய வைத்து மாலை நேரம் வந்ததும் இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊற வைக்கவும், இப்படி நான்கு நாட்கள் வற்றல் நன்றாக காயும் வரை காய  வைக்கவும்.

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டு  வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும். சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஒடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 
சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஒமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
 
சுண்டை வற்றல் உடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியன சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments