Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

எல்லா வியாதிகளுக்கும் நிவாரணம் தரும் கருஞ்சீரகம்.....!

Advertiesment
நிவாரணம்
கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.
* ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு  நீங்கும்.
 
* கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது.  இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.
 
* கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும்  கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.
 
* தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு  விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.
 
* தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம்.  புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.
 
* புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை  கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் பல்வேறு நோய்களை நெருங்க விடாது...!