Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் !!

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் !!
தக்காளி: தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள அமிலம்தான் முக்கிய காரணம்.


இந்த அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.
 
மாத்திரைகள்: எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை  அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
 
ஆல்கஹால்: பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப்  படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.
 
சோடா: சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து,  அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
 
காரமான உணவுகள்: காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம்  சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் தொட்டால் சிணுங்கி மூலிகை !!