Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான பிரச்சினைகளை போக்க உதவும் வெந்தயம் !!

Webdunia
வெந்தயம் நீர் உட்கொள்ளும்போது அது ஒரு வரமாக இருக்கும். ஏனெனில் இது உடலை வெப்பமாக்குகிறது மற்றும் உணவை எளிதில் செரிமானப்படுத்த உதவுகிறது. 

வெந்தயம் நீர் தேக்கத்தையும் உடலில் வீக்கத்தையும் குறைக்கிறது. இது உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
 
வெந்தயம் விதை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். தினமும் குறைந்தது 5 கிராம் அளவுகள் இதற்கு  உதவும். ஊறவைத்த வெந்தயம் அதிகபட்ச நன்மையைத் தருகிறது.
 
வெந்தயம் இயற்கையில் ஆக்ஸிஜனேற்றியாகும். இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது. இதனால் தெளிவான ஒளிரும் சருமத்தை அளிக்கிறது.
 
வெந்தயம் விதைகள் எண்ணெய்களில் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படுகின்றன. வெந்தயத்தை அரைத்து, குளிர்ந்த கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த  எண்ணெய்யை உச்சந்தலையில் தடவினால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மயிர்க்காலின் வலிமையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
 
ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறது, இதனால்  அனைத்து செரிமான பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது. இதனால் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையை நிர்வகிக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments