வெந்தயத்திற்கு உடல் எடையை குறைக்கும் சக்தி உண்டு. வெந்தயத்தை சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைக்க உதவும்.
மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு வெந்தயத்தை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் வலி நீங்கும்.
சீறுநீரக கற்கள் காரணமாக அதிக வலி ஏற்படும்போது வெந்தயத்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதன் மூலம் சிறுநீரகம் பலமாகும்.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 24 வாரங்கள் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது.
10 கிராம் அளவு வெந்தயத்தை நெய் சேர்த்து வறுத்து, அதில் சிறிது சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது. வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.