Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக அழகை மெருகூட்டும் இயற்கை வைத்திய குறிப்புகள்!!

Webdunia
முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மென்ட் தருவது எபப்டி? 1 ஸ்பூன் கேரட் சாறு மற்றும் 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்துவரவேண்டும்.

 
* மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் மீது தடவி, 15 நிமிடத்திற்குப் பின் கழுவி விடலாம். முல்டானி மட்டியில் பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலர்ந்தபின் கழுவ, பருக்கள் மற்ற்ய்ம் அழுக்குகள் போய் விடும்.
 
* உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு ப்ளீச் பேக் இருக்கிறது. 1 ஸ்பூன் முல்தானி மெட்டியும், 1 ஸ்பூன் தேங்காய்ப் பாலும் கலந்து முகத்துக்கு பேக் போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த பேக் போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானி மெட்டி எடுத்துவிட, சருமத்தை தேங்காய்ப் பால் மிருதுவாக்கிவிடும்.
 
* ப்ளீச்சிங் செய்ய கொஞ்சம் சர்க்கரை, சில சொட்டுக்கள் தேங்காயெண்ணெய், சில சொட்டுகள் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் தேய்த்து, சிறிது பின் கழுவி விடலம்.
 
* முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் பேக் இருக்கிறது. 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் மற்றும் 1 ஸ்பூன் பயத்த மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்து பேக் போடுங்கள். காய்ந்ததும் அலம்பிவிடுங்கள், வாரம் இருமுறை இந்த பேக் போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.
 
* ஃபேஷியல் செய்துகொள்வதற்கு பதில்: கடலை மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பாலாடை முதலியவற்றை ஒன்றாகக் கலந்து, முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் பளிச்சென்றாகி விடும்.
 
* பொடுகு நீங்க லோஷன் போட்டு ஊற வைத்து சிகிச்சை செய்வதற்கு பதில் வெந்தயம் ஊறவத்து அரைத்து தலையில் ‘பேக்’ போட்டு அலசி விடலாம். தயிருடன் வெள்ளை மிளகுதூள் கலந்து முடிக் கால்களில் படும்படி ‘மசாஜ்’ செய்து அலசி விடவும்.. பொடுகு போய் விடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments