Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாடம் உணவில் பசலைக்கீரை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்....!

Webdunia
பசலைக்கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்துகள், பெரும் அளவில்  வைட்டமின்கள் சுண்ணாம்புச்சத்து உள்ளது.

பசலைக்கீரையில் இரும்புச் சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து, ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
 
பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தி யாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும்  அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
 
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள  பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக் கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
 
பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால்,  உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
 
பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும்.  அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
 
பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
 
பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
 
ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் `கே’ வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.
 
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலி யைக்குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments