Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் தயிர் சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதை தடுக்கலாமா...?

Advertiesment
தினமும் தயிர் சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதை தடுக்கலாமா...?
அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச்  சேர்த்துக்கொள்வது நல்லது.
 
தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ‘நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என  ஆய்வில்  தெரியவந்தது.
webdunia
மேலும் ஆய்வில் பங்கேற்ற அனைவரும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவுக்கு, தினமும் தயிர் வழங்கப்பட்டது. அடுத்த  குழுவுக்கு அவ்வப்போது மட்டும் தயிர் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில், தினமும் தயிர் சாப்பிட்ட குழுவினரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவாக இருந்தது தெரியவந்தது.
 
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
 
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக்  கொண்டுள்ளது.
 
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது.
 
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும்  கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு  தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
 
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம். சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு  அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரிசலாங்கண்ணி கீரையை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்...!!