Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு !!

தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு !!
தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும், மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.
 
தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.
 
தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் வருவதால், அடிக்கடி நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது. தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சனையை தவிர்க்க முடியும்.
 
தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம்.
 
இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
 
தலையை காய வைத்ததும் நீர்கோர்த்து கொண்டிருந்தால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு வேது (ஆவி) பிடிக்கலாம்.
 
கொதிக்கும் நீரில் செங்கல் போட்டு, அந்த ஆவியை நன்கு முகர்ந்து உள்ளிழுக்கலாம் அல்லது நீட்டு மஞ்சள் தீயில் காண்பித்து முகரலாம். இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர தலையில் நீர் கோர்க்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதுபோன்ற வேளைகளில் காபி, இஞ்சி டீ, சூப் போன்ற சூடான பானங்களை குடிப்பது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய் !!