Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி நல்லது ஏன் தெரியுமா...?

Webdunia
கோடைகாலத்தில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச்  செய்யும்.
கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை  தருகிறது. 
 
கோடைகாலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. 
 
மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. எனவே தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால்  மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.
 
ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இவை அனைத்தும்  அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன. 
 
தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இது தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும். 
 
தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை குறைப்பு உடல் எடை குறைய தர்பூசணி பழம் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments