Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கும் முருங்கை கீரை !!

Advertiesment
கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கும் முருங்கை கீரை !!
முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது.  இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம். 
 
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. எலும்பு, பற்கள் வலுப்பெறும், ரத்தசோகையைக் கட்டுபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையைப் பேருக்கும்.
 
முருங்கை கீரையை சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.
 
முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும்  தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.
 
முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான  முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.
 
உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும். கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். பார்வைத்திறனை  மேம்படுத்தும்.
 
செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும். முருங்கைக்கீரைச் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பொடுகுப் பிரச்னை தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!