Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் முருங்கை !!

Webdunia
முருங்கையின் காய், இலை, பூ, விதை என அனைத்துமே மருத்துவ பயனுடையது. முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், வாய் கசப்பு ஆகியவை நீங்கும்.

முருங்கை இலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் இரத்த சோகை பெண்களுக்கு உண்டாகும் உதிரப்போக்கு ஆகியவற்றை குணமாக்குகிறது. முருங்கை  இலையை நன்றாக அரைத்து வீக்கங்களுககு பற்று போட்டால் வீக்கம் வடியும். 
 
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்து நெற்றில் பற்று போட தலைவலி காணாமல் போகும். இலைச்சாறு சிறிதளவு கண்களில் விட்டால் கண் நோய்கள் குணமாகும்.
 
முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி துவரம் பருப்புடன் சாம்பாரில் அல்லது ஆட்டு இறைச்சியில் போட்டு சமைத்து சாப்பிட்டால் குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். வாய்வு தொல்லை நீங்கும்.
 
முருங்கைப்பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை-மாலை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும். சர்க்கரை நோய் குணமாகும். உடல் வலுவடையும், நரம்புகள் புத்துணர்வு பெறும். ஆண்மை அதிகரிக்கும்.
 
துவரம் பருப்புடன் முருங்கைப்பூவை வேகவைத்து சிறுதளவு தேங்காய் அரைத்து சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் போட்டு கடைந்து சாப்பிட்டு வர விந்தணு  குறைபாடு நீங்கும்.
 
முருங்கை விதையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்விதையின் எண்ணெய்யுடன் சம அளவு கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு  தடவினால் மூட்டு வலி குணமாகிறது.
 
முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கும். இதயத்தைப்  பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!

வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments