Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா...!

Advertiesment
பதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா...!
பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.
உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர்  வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.
 
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.
 
சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல்  பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
 
பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
 
உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.
 
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு,  மூல சூடு தணியும். 
 
மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல்  நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை...!