Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்ய உதவுகிறதா திராட்சை...?

Advertiesment
Grapes
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:57 IST)
திராட்சை பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு வகை பழமாகும். இதன் சுவை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையை கொண்டுள்ளது. 


திராட்சை பழம் மலச்சிக்கல், வயிற்று வலி, எரிச்சல் கொண்ட குடல் நோய், வாய்வு மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

திராட்சை பழம்  மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்ய உதவுகிறது. திராட்சையில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே குடல் இயக்கத்தை மேம்படுத்தி  உடலில் இருந்து மலம் சீராக வெளியேற உதவுகிறது.

திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும்.

webdunia

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50.67 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!