Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீர் அருந்துவது உடல் சூட்டை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுமா...?

நீர் அருந்துவது உடல் சூட்டை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுமா...?
நீர் பருக ஏற்ற நேரம் எது என்றால் உங்களுக்கு தாகம் எடுக்கும் போதுதான். அது உங்கள் உடம்பிற்கு நீர் தேவை என்பதையும் அறிவுறுத்துகிறது.


உடல் வறட்சி மிக கொடுமையானது. அது பேராபத்துகளை உருவாக்கக் கூடும். மயக்கம், வாந்தி, தலை சுற்றல், மதுரம் மன பாதிப்புகள், ஞாபக மறதி, கவனக் குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடும். உடல் வறட்சி குறைந்த ரத்த அழுத்தம் அதிக சோர்வு போன்ற உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
 
குளிர்ந்த நீர் பருகுவது உடம்பில் கலோரிக்களை விரைவாக எரிக்கும். ஆய்வு கூறுவது என்னவென்றால், வழக்கத்தை விட ஒரு லிட்டர் தண்ணீர் அதிகம் அருந்துவதால் நீங்கள் உடல் எடையை ஒரு சில மாதங்களில் குறைக்கலாம். தண்ணீர் அருந்துவது உங்கள் உடலில் சக்தியை அதிகரிக்கும். 
 
தண்ணீர் வயிற்றில் இருக்கும் உணவை ஜீரணிக்க பெரிதும் உதவும். அது ஜீரண பிரச்சனைகளை சரி செய்யும். வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 
 
சுடு தண்ணீர் விரைவாக ஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும் அசுத்தங்களை வெளியேற்ற உதவும். உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சணை இருந்தால் நீங்கள் அதனை  உடனடியாக சுடு நீர் குடித்து சரி செய்யலாம்.
 
சுடு தண்ணீர் அருந்துவதால் ஏதேனும் உணவு ஜீரணிக்காமல் குடலில் தேங்கி இருந்தால் அதனை விரைவாக சரி செய்ய உதவும். அது பொதுவாக வயிற்றில்  இருக்கும் அனைத்து பிரச்சணைகளையும் சரிசெய்ய உதவும். 
 
மலச்சிக்களில் அவதிப்படுகிறவர்கள் என்றால் உடனடியாக சுடு தண்ணீர் குடிப்பதால் நிவாரணத்தை காண்பீர்கள். மேலும் பலன் பெற கொஞ்சம் எலுமிச்சை பழ சாற்றையும் பச்சை தேயிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எனினும் ஆய்வுகள் உங்களுக்கு தாகம் எடுக்கும் போது நீர் அருந்தினால் போதும் என்று  பரிந்துரை செய்கிறது. அதனால் உங்களுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்திய பிறகும் தாகம் எடுத்தால் நீங்கள் தேவைப்படும் தண்ணீரை அருந்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும வறட்சியை போக்கி பளபளப்பை தரும் வாழைப்பழம் !!