கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக் கூடியது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.
கொத்தமல்லி தழையை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து, அதனை நன்கு கழுவி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பும், தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து விடுங்கள்.
அரைத்த பின் இதனை வடிகட்டி எடுத்து ஒரு டம்ப்ளரில் விட்டு அதனுடன் பாதி எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது கொத்தமல்லி ஜூஸ் தயார்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துகொள்வதால்,ரத்த அழுத்தம் குறைவதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது.
கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இரத்த சோகை இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.