Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயிரில் உடலுக்கு நன்மையை விளைவிக்கும் பாக்டீரியா உள்ளதா....?

தயிரில் உடலுக்கு நன்மையை விளைவிக்கும் பாக்டீரியா உள்ளதா....?
தயிர் இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதாகவும், மேலும் பக்கவாதப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருந்து வருகின்றது. மேலும் தயிரில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாவானது செரிமானத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது.
 
வறண்ட சருமம் உள்ளவர்கள் எந்த அளவு தயிரினை எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் தயிர் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.
 
தயிர் மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த தீர்வினைக் கொடுப்பதாகவும்  உள்ளது. மேலும் மலக்குடலில் ஏற்படும் எரிச்சல், அல்சர் என்னும் குடற்புண் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த ரிசல்ட்டினைக் கொடுப்பதாய் இருக்கும்.
 
தயிரானது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. இதனால்தான் கடைசியாக தயிரினைச் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு குடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தயிரினைக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் பெறுவார்கள்.
 
தயிர் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதாகவும் சிறப்பானதாக உள்ளது. மேலும் தயிரானது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
 
கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும். சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் பருமனை குறைக்க வழிமுறைகள்