Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறதா ஏலக்காய்...?

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (13:13 IST)
ஏலக்காய்களை மென்று சாப்பிடும் பொழுது வெளிவரும் சாறு செரிமானத்தை மேம்படுத்தவும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது.


வயிறு உப்புசம், வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் குணமாகும்.

உடல் எடையை குறைப்பதற்கான ரகசியம் அதிகம் நம்முடைய சமையலறையில் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஏலக்காய். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைகிறது.

ஏலக்காயில் மெலடோனின் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பை வேகமாக எரிகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறைகிறது.

ஏலக்காயை உணவு உண்ட பிறகு சாப்பிடுவார்கள். இது வாய் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. ஏலக்காய்களை மென்று சாப்பிடும் பொழுது வெளிவரும் சாறு செரிமானத்தை மேம்படுத்தவும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. ஆகையால் வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் இந்த பானம் உங்களுக்கு உதவும்.

இந்த ஏலக்காய் பானம் செய்ய ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் 4 ஏலக்காய்களை உடைத்து தண்ணீரில் சேர்க்கவும். 1 நிமிடம் கொதித்த பிறகு பானத்தை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் படுக்கைக்கு செல்லும் முன்னர் குடியுங்கள். இது தூக்கத்தை தூண்டும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். கூடவே உங்கள் உடல் எடையை குறைக்கும்.

வாய்ப்புண், பற்சொத்தை, பல்வலி, பல் ஏறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண், பல்வலி போன்றவை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments