Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் பருமனை குறைக்க உகந்த காய்கறிகள் எது தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:35 IST)
சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்

குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.  கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்.

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments