Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்புச்சத்தும் எராளமான தாதுசத்துக்களும் நிறைந்துள்ள கீரை எது தெரியுமா...?

Webdunia
கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஓன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசத்துக்களும் இந்த கீரையில் உள்ளன.
 
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.
 
மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
 
கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 100 மி.லி அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்ந்து காய்ச்சி 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி,இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.  இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.
 
இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு,தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments