Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த உணவுப்பொருள்களில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது தெரியுமா...?

Webdunia
குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் சேர்ந்ததுதான் சரிவிகித ஊட்டச் சத்து.


எல்லாச் சத்துக்களுமே முக்கியமானவை என்றாலும், உடல் செல்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.
 
வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின், வைட்டமின் டி-யைப்போல் இதை நம் உடல், உற்பத்தி செய்வதில்லை. நீரில் கரையக்கூடியது என்பதால், சேமித்து வைக்கவும் முடியாது. எனவே, பெரியவர்கள் தினசரி 60 கி.மி. அளவுக்கு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, நெல்லிக்காயில்  வைட்டமின் சி அதிகம் உள்ளது. 
 
நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன் லிகமெண்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு  மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது. மேலும் நம் சருமம் மற்றும் இதர உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது.
 
100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மி.கி. அளவில் வைட்டமின் சி உள்ளது. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவடையும். வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புரச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் ஆரஞ்சு முக்கியமான பங்கு வகிக்கிறது. 
 
வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.  மேலும், கலோரி அலவு குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினப்போர், தினமும் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும் அதுமட்டுமின்றி,  ஆரஞ்சுப் பழத்தில்ன் வாசமே மன்நிலையை சந்தோஷமாக மாற்றும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடிக்கடி வரும் ஏப்பம்: காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை: நன்மைகளும், தவறான பழக்கங்களும்!

அடுத்த கட்டுரையில்
Show comments