Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்கள் எவை தெரியுமா...?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:47 IST)
பெரும்பாலான கீரை வகைகளில் கால்சியம் உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும்.


மணத்தக்காளி கீரையைக் கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும். வெங்காயத்தாளில் கால்சியம், பொட்டாசியம் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனை காய்கறி சூப் முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

எள் சாப்பிடும் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது என்றே சொல்லலாம். எள் உருண்டை செய்து சாப்பிடலாம். எள்ளைப் பொடி செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். எள்ளில் நிறைய கால்சியம் சத்து இருக்கிறது.

உலர் அத்திப்பழத்தை தினமும் இரண்டு வில்லைகள் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராது. மேலும் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமானக்கோளாறுகள் நீங்கும்.

வெண்டைக்காயில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. வெண்டைக்காயில் உள்ள பெக்டின் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments