தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் குறிப்புகள் !!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:29 IST)
தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும்.


வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு, பேன், தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும், பளபளப்பாக மாறி , அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்திப் பூவை பறித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தலைமுடிக்குத் தினம் தேய்த்து வரத் தலைமுடி செழிப்பாக வளர தொடங்கும்.

செம்பருத்தி இலைகளைப் பறித்து அரைத்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து ,பின்பு ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வர முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் கோதுமை உணவை எடுத்து கொள்வதால் ஏற்படும் நலன்கள்..!

வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்படுமா?

தினசரி உணவில் பருப்பு வகைகள் சேர்ப்பது உடலுக்கு நன்மையா?

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

அடுத்த கட்டுரையில்
Show comments