Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முளைக்கீரையில் என்ன உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது தெரியுமா...?

Advertiesment
முளைக்கீரையில் என்ன உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது தெரியுமா...?
, புதன், 15 டிசம்பர் 2021 (11:58 IST)
முளைக்கீரையில் வைட்டமின் A, B, C உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.

இந்த முளைக்கீரையுடன் பருப்புச் சேர்த்துக் கடைந்து பகல் சாதத்துடன் எலுமிச்சம்பழ அளவு கீரையைத் தினசரி கொடுத்து வந்தால் குழந்தை நல்ல பலத்துடன் வளருவர்.
 
முளைக்கீரையை தினசரி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட எல்லா வியாதிக குணமாகும். சர்ம சம்பந்தமான சொறி, சிரங்கு, மற்றும் புண் இரணங்கள் ஆறும். பற்கள் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
 
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு முறுக்கேறும். எலும்பு வளர்ச்சி பெறாதவர்களுக்கு முளைக்கீரையைக் கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.
 
முளைக்கீரைக்கு அறிவை விருத்தி செய்யும் சக்தியும் உண்டு. சிறுநீர் சம்பந்தமாகக் கஷ்டப்படுகிறவர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் காணலாம்.
 
எல்லா வியாதிக்கும் காரணமான மலச்சிக்கல் உள்ளர்வர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது. முளைக்கீரை நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
 
முளைக்கீரை குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆகையால் எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று சாப்பிடக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த வாழைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது...?