தினமும் இந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா...?

வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இந்நோய்களில் இருந்து  விடுபடலாம். தினமும் இரவு உணவிற்குப்பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

உலர் திராட்சை: உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 
சப்போட்டா சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும் சுருக்கங்கள் வர விடாமல் தடுக்கிறது. மேலும் தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தி  ஏற்படும்.
 
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகமாகி உடலுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.
 
தினமும் மாதுளை பழச்சாறு அருந்துவதால், உடலை சுறுசுறுப்பாக்கிவிடும். மூளையை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை காணாமல் போகச் செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்....!!