Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்பருத்தி பூ எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

Advertiesment
செம்பருத்தி பூ எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?
, செவ்வாய், 8 மார்ச் 2022 (17:45 IST)
இருதய நோயாளிகள் செம்பருத்தி பூ இதழ்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.


செம்பருத்தி பூ இதழ்களுடன் இரண்டு கருவேப்பிலை, இரண்டு காட்டு நெல்லிக்காய், சிறிது இஞ்சி சேர்த்து கஷாயமாக தேன் சேர்த்து குடிக்க இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு நீங்கி அமைதி நிலையை அடைவார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தவிர்த்து உடம்பினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய வாய்ப்புண், வயிற்று புண்களை சரிசெய்து உடல் வெப்பநிலையை சமநிலையை கொடுக்கிறது.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்குமே எது ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. முறையற்ற மாதவிடாய், அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கருப்பையில் ஏற்படக்கூடிய நீர்கட்டிகள் போன்றவற்றுக்கு நல்ல பயனை அளிக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் காலையில் செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி அதனை சாப்பிட்டு வர கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்து இரத்தசோகையை சரிசெய்யவல்லது. தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு , அசிடிட்டி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதனை பாலில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மேலும் தலைமுடி வளர்ச்சிக்கும், இளநரை போன்ற பிரச்சினைகளுக்கும் இது ஒரு அருமருந்தாக இருக்கிறது.

சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு அருமருந்தாக பயனளிக்கிறது. செம்பருத்தி இதழ்களுடன் இரண்டு அல்லது மூன்று ஆடு தொடா இலைகளை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது வறட்டு இருமலை சரிசெய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோய்களை எதிர்த்து போராடும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த சீரகம் !!