Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...?

Advertiesment
காலையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...?
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். 
குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ்  வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க  வேண்டும்.
 
காலையில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சுட்ட ரொட்டிககளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக வெண்ணை கலந்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரெட் உள்ள பிரட் ஆனது காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாகும்.
 
தயிர் காலை வேளைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.தயிர் ஆனது ஹைட்ரோ குளோரிக் அமிலம் உருவாக்க செய்து லாக்டிக் அமிலத்தை நீக்குகிறது. தயிருக்கு பதிலாக முட்டை சாப்பிடலாம் இவை கலோரிகளை குறைத்து உடலுக்கு உறுதி அளிக்கிறது.
 
தக்காளியும் காலை உணவிற்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அதில் அமிலம்  அதிகமாக இருப்பதால் அமிலத்தன்மையை வயிற்றில் அதிக படுத்தி இரைப்பை புண்களை உண்டாக்குகின்றது. நாள் முழுவதும் அதிக சக்தியை உண்டாக்க சோளம் கலந்த உணவை காலை உணவில்  சாப்பிடலாம்.  இவை அதிகமான நச்சு பொருட்களை நீக்குகின்றன.
 
குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்தும். காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது  சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்தி விடும். 
 
சிட்ரஸ் பழ வகைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை செரிமானத்தை தாமதப்படுத்தும்.கொய்யா, ஆரஞ்சு பழங்களை  காலையில் சாப்பிடவே கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் வயிற்றுக்கு தீங்கு இழைக்கும். அவைகளை வெறும் வயிற்றில்  சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!