Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள் என்ன தெரியுமா...?

Webdunia
காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதிலிருக்கக்கூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்களினால் உங்களது உடலின் மெட்டபாலிசம் மிகவும் வலிமையாக இருக்கும்.

பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.
 
பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
 
காலி ஃப்ளவரில் பைட்டோகெமிக்கல் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் நமக்கு ஏரளமான நன்மைகளை செய்திடுகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள்  மற்றும் ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
வெண்டைக்காய் அடிக்கடி உங்களது உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தாண்டி வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது  மிகவும்  சிறந்தது. முதல் நாள் இரவிலேயே வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊறவைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி  காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
 
பாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இதில் கால்சியம்,  பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3, சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை உண்டு. இவை ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments