Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...?

ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...?
ரோஜா பூவை அழகுக்காக மட்டுமின்றி மருத்துவ உலகிலும் பெரிதளவு பயன்படுகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். 


ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.
 
குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும். ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.
 
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.
 
பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும், வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7  நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.
 
ரோஜா இதழ்களை வேளைக்கு 1 கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தைச் சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் அகலும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது முந்திரி பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?