Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைராய்டு பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

Advertiesment
தைராய்டு பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. 

இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. 
 
இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 
 
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம். 
 
உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
 
தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுனி முடி பிளவு பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!