Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுநீரகத்தில் கல் உருவானவதற்கான காரணங்கள் எவை தெரியுமா...!

Advertiesment
சிறுநீரகத்தில் கல் உருவானவதற்கான காரணங்கள் எவை தெரியுமா...!
கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். 
இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 
 
நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
 
சிறுநீரகத்தில் கல் உருவானதை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறைகளில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.
 
தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல்  உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
 
ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல்  உருவாகுவதை தடுக்க முடியும். 
 
தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கல் ஏற்படுவதை தடுக்க முடியும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைக்கு ஒரு வயதுவரை கொடுக்க வேண்டிய உணவு முறைகள்...!