பனங்கிழங்கு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

Webdunia
பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலுகிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக தோசை செய்தும் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும். இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது.
 
பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.
 
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெறும். சர்க்கரை பாதிப்பு  உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.
 
வேக வைக்காத பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி  சாப்பிடலாம். இந்த மாவை நீரில் கரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்து, கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா  செய்தும் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments