குங்குமப்பூவில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் போன்ற தனிமங்களில் இதில் உள்ளது.
குங்குமப்பூவில் பல்வேறு அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இதில் கால்சியம், மெக்னீசியம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவற்றில் நிறைந்துள்ளது.
குங்குமப்பூ உங்கள் சருமத்தை பொலிவடைய செய்யக்கூடும். சிறிது சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூசுங்கள்.
நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் வரை காய விடுங்கள். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
குங்குமப்பூவில் கரோட்டினாய்டிகள் இருப்பதால், குங்குமப்பூ ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மீது ஒரு சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது.
குங்குமப்பூ இரைப்பை புண்களின் உருவாக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது. அதிக அளவு குரோசின் எடுப்பது முற்றிலுமாக இரைப்பைப் புண் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த முடிவு தொடர்ந்து குங்குமப்பூவை எடுத்துகொள்வதனால் இரைப்பை புண் அறிகுறிகளை தடுக்க உதவும் என்று அறியவந்துள்ளது.