Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரை தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா....!!

Webdunia
தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள்நிறைந்து. தாமரை கிழங்குகள் என்று அறியப்படும் இதில் உடலுக்கு  தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன.
 
நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கும் தாமரை தண்டை பச்சையாக சமைத்து சாப்பிட்டாலே போதுமாம்.
 
66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம்  என்று மதிப்பிட்டுள்ளனர்.
 
தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப்  பொருட்களும் உள்ளன.
 
நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன  மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும்  தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
 
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது  குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.
 
குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது. ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது  கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின்  கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments