Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

நோயை விரட்டும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...!

Advertiesment
நோயை விரட்டும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...!
கத்திரிக்காய்: கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை  குறிப்பிடத்தக்கவை. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் இடம் பெற்றுள்ளது.
முருங்கைக்காய்: இரத்தத்தை சுத்திகரிக்கும். முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. முருங்கை காய் கோழை  அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும்.
 
உருளைக்கிழங்கு;  நோய் எதிர்ப்பு சகிதியை அதிகரிக்கும். யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு  எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
 
வெண்டைக்காய்:  எடை குறைப்பிற்கு உதவுகிறது. சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும். 
 
பீர்க்கங்காய்: கண் பார்வை குறைபாட்டை சரிசெய்கிறது. பீர்க்கங்காய் இலை, விதைகல், வேர் என அனித்தும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை.
 
சௌ சௌ: இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தைராய்டு கோளாரால் அவதிப்படுபவர்கள் சௌசௌவைப் பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும்  காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். 
 
புடலங்காய்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. புடலங்காய் உடம்பின் அதிக வெப்பத்தை தணிக்க பயன்படும். காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தலையில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள் தினமும் இதன் சாற்றை ஜூஸ் செய்து குடித்து வர முடி வளர்ச்சியை பெறலாம்.
 
பீட்ரூட்: இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. பீட்ரூட்டில் குறைந்த கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புச்சத்துகளும் அடங்கி உள்ளன. அதுமட்டுமின்றி இது  நமது உடலில் நன்கு ஆற்றலை உருவாக்குகிறது.
 
காலிஃப்ளவர்:  ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.
 
வாழைப்பூ:  சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல் கூச்சம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?