Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுகு பிரச்சனையை முற்றிலும் விரட்டும் பொடுதலை....!

Advertiesment
பொடுகு பிரச்சனையை முற்றிலும் விரட்டும் பொடுதலை....!
பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களை பலபபடுத்தும்.
கோழை அகற்றும். உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும். சிறு நீரைப் பெருக்கும். சீதக் கழிச்சல், இருமல், வெள்ளைப் படுதல் போன்றவற்றையும் குணமாக்கும்.
 
பொடுதலை இலைகளை அரைத்து பசையாக்கி தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பொடுகு கட்டுப்படும். தலைக்கான  சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பொடுதலை முக்கிய இடம் பெறுகின்றது.
 
பொடுகு பிரச்சனை குறைய முடி உதிர்வை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு ஒரு கண்ணாடி சீசாவில் இலைகளை இட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாட்கள் வைத்திருந்து  வடிகட்டி , தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும். 
webdunia
பொடுகு நீங்க எண்ணெய் தயாரிக்கும் முறை: 
 
முடி இருப்பவர்களுக்கெல்லாம், பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து  இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு சிறு தீயில் காய்ச்சி நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள  வேண்டும்.
 
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
 
இதற்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடுதலை என பல பெயர்ககளும்  உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் தரும் பலன்கள்...!