Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதாப்பழத்திற்கு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உண்டா...?

Webdunia
உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை கணிசமாக குறையும். உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை  ஏற்படுத்தும்.
 
சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு
 
அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீதாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும். சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
 
சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது தடுக்கும் தன்மையை உண்டாக்கும். சளிப்பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சளி குணமாகும்.
 
சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்டிரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
 
சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப் பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments