Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீராத மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் வெள்ளரி !!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (09:27 IST)
வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.


சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையைப் போக்கும்.

நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும்.

முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு, பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments