Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சளி மற்றும் இருமலை விரட்ட தூதுவளை இருந்தால் போதும்...!

சளி மற்றும் இருமலை விரட்ட தூதுவளை இருந்தால் போதும்...!
தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு  தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது.
 
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப்  பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
 
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து  ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
 
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
 
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
 
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது.  பசியை  உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான இனிப்பு பொங்கல் செய்ய...!