Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ள கிராம்பு !!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:40 IST)
கிராம்பு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது பரவிவரும் தொற்றில் இருந்து நம்மைக் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.


குறிப்பாக கல்லீரலை பாதிக்கக்கூடிய தொற்றிலிருந்து காக்கின்றது. காலையில் இரண்டு கிராம்புகளை லேசான சுடுநீரில் போட்டு குடித்தால் வயிறு மிகவும் சுத்தமாக இருக்கும்.

அடிக்கடி சளி காய்ச்சல் உள்ளவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும். கிராம்புகளின் பயன்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பு சாப்பிடுவது நம்மை அலர்ஜி பிரச்சினையில் இருந்து விடுபட செய்யும்.

இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது. தொண்டை மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்த இது உதவுகிறது.

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments