Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கிராம்பு !!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:21 IST)
கிராம்பு அதிக மருத்துவ பண்புகளை கொண்டுள்ளதால் ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.


கிராம்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, கிராம்பு உங்கள் உணவில் சுவையை தருவதோடு, சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தருகிறது.

பல்வலி, பற் சொத்தை, ஈறு பிரச்சனைகள், வாய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கிராம்பை மென்று வாயில் வைத்திருந்து பொறுமையாக சாப்பிட்டால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

கிராம்பில் பல முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

இரவில் கிராம்பை சாப்பிடுவது சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. குமட்டல், எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

கிராம்புகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இவை நச்சுக்களை வெளியேற்றி கல்லீரளை பாதுகாக்கிறது.

கிராம்பை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments