Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் வல்லாரை..!

Webdunia
வல்லாரை உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.‘பிரம்மி’ என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. 
வல்லாரை சாப்பிடுவதால் உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளை வளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.
 
வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48 அல்லது 96 நாள்  சாப்பிட்டு வர எல்லா நோய்களும் குணமாகும். 
 
உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருடம் சாப்பிட்டால் நரை, திரை மாறும். வல்லாரை மற்றும் தூதுவிளையை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.
 
பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை மற்றும் உத்தாமணி  இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும்.
 
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பு:
 
தேவையான பொருட்கள்: வல்லாரை இலைச்சாறு - 50 மி.லி., நாட்டு சர்க்கரை, பால். ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து,  பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை  தருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments