உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள். நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது.
கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது. இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செலரியில் கலோரிகள் அறவே கிடையாது. அதிக அளவு தண்ணீர் கொண்டது. இதனால் கலோரிகள் உடலில் சேராது. அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
உடலை டீடாக்ஸ் செய்வதால் டாக்ஸின்கள் வெளியேறுகிறது. சருமத்துக்கும், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம்.