Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!
நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் திடீரென கால்களில் கரன்ட் வைத்த்து போல் ‘சுர்’ரென இழுக்கும் ஓர் உணர்வு இருக்கும். அடுத்த சில நிமிடங்களுக்கு கால்களை அசைக்கவே முடியாது. ‘வேரிகோஸ்  வெயின்ஸ்’ என்ற இந்த நரம்பு சுருட்டிக் கொள்ளும் பிரச்னையை வாழ்க்கையில் பலரும், ஏதேனும் ஒரு காலகட்டத்தில்  உணர்ந்திருப்பார்கள்.
பெண்களை அதிகம் பாதிக்கின்ற இந்த வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை பற்றி பார்ப்போம். இதயம்தான் உடல் உறுப்புகள் அத்தனைக்கும்  ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிறது. ரத்தக் குழாய்களுக்கு ‘வெயின்ஸ்’னு பேர். அப்புறம் கார்பன் டை ஆக்சைடு கலந்த   ரத்தத்தை மறுபடி இதயத்துக்குக் கொண்டு வருவதும் இதே வெயின்ஸ்தான். இப்படி ரத்தம் இதயத்துக்குப் போவதற்கு கால் தசைகளும்கூட பம்ப் மாதிரி உதவி செய்யும். அப்படிப் போகும்போது கால்களில் உள்ள நாளங்கள் வீங்கி, புடைத்து விடுவதால், ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தாலும் வேரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.
 
ஆண்களைவிட பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் வருது. நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்க்கிறவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்குகிறவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். பரம்பரை ரீதியாகவும்  குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் இதனால் பாதிக்கப் படுகிறார்கள்.
 
கை, கால்கள் வலி, வீக்கம், உள்ளுக்குள் ரத்தம் தேங்கி, சருமத்தில் மாற்றங்கள் தெரியும். சின்னதா அடி பட்டாலும் அதிக ரத்தப் போக்கு, சருமத்தில் கருப்பு, கருப்பா திட்டுக்கள், நடக்கும் போது வலி வெரிகோஸ் வெயின்ஸ் நிறைய அறிகுறிகளைக் காட்டும். சில சமயம் புண்  வந்தாலும் சீக்கிரம் ஆறாது.
webdunia
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. கால்களை ரொம்ப நேரம் தொங்கவிட்டபடி உட்காராமல், கொஞ்சம் உயர்த்தின  மாதிரி  வைக்க வேண்டும். ரொம்ப நேரம் நிற்பதை தவிர்ப்பது நல்லது.. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பப்பையோட அழுத்தம் காரணமாக,  இந்தப்  பாதிப்பு வருவது உண்டு.
 
இடது பக்கமாக திரும்பிப் படுக்கிறது அவர்களுக்கு இதம் தரும். பிரச்சனை இருக்கிறவர்கள் உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. கால்களில் சாக்ஸ் மாதிரி அணியற ‘கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ்’ உபயோகிப்பது பலன் தரும். 
 
பிரச்சனை தீவிரமானவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன. ‘என்டோவீனஸ்  லேசர் சிகிச்சை’, ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி  அப்லேஷன்’, ‘செலெரோ தெரபி’ போன்ற நவீன சிகிச்சைகளும் குணம் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான சிக்கன் போண்டா செய்ய...!!