சிலருக்கு எப்பொழுதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு என்னதான், நவீன மருந்துகள், எடுத்துக் கொண்டாலும் அந்த மருந்துகள் வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தோலில் பல வகையான தொற்று வியாதிகளான சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகின்றது.
விளக்கெண்ணெய்யை சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
தினமும் உறங்கச் செல்லும் முன்பு விளக்கெண்ணெய் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் சரியாகும்.
நமது உடம்பின் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக் கொள்வதால் சுளுக்கு ஏற்படுகின்றது. மேலும், உடலில் ஏதாவது ஒரு அடிபட்டாலும் அந்த இடம் வீங்கி விடுகின்றது.
விளக்கெண்ணெய்யின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி அந்த இடத்தின் மீது ஒத்தனம் கொடுக்க, வீக்கம் விரைவில் குறையும்.
விளக்கெண்ணெய்யின் சில துளிகளை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே, தலைமுடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள், விளக்கெண்ணெய்யில் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும்.