பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக  உள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
		பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
 
		 
		பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி  போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது. 
	பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு  தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும்.
	 
	பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும்  உதவுகிறது.
	 
	நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு  பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். 
	 
	பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.