Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுமா...?

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (15:31 IST)
உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னர் சாப்பிடுவதே மிகச் சிறந்தது மற்றும் இது நல்ல பலன்களை அளிக்கக்கூடிய முறையாகும்.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுவதற்கு வழிவகுக்கும்.
 
உடலில் உணவு செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவும். மதிய நேரங்களில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிடுகிற பட்சத்தில், அதன் பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது சிறந்தது.
 
உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும். உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவுகிறது.
 
உங்களின் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சை மிகவும் உதவும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சைப் பழம் உதவுகிறது.
 
மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கும் உலர் திராட்சை உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர்திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.
 
மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அந்த நோயில் இருந்து விடுபட உதவும். கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மிகவும் உதவுகிறது.
 
மலச்சிக்கல் பிரச்சனை உலர் திராட்சையை சாப்பிட்டால் சரி ஆகும். உங்களது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. உலர் திராட்சை சாப்பிடுவது உடல் சூட்டை தனிக்கவும் உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments