Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் கத்தரிக்காய் !!

கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் கத்தரிக்காய் !!
, திங்கள், 21 மார்ச் 2022 (13:14 IST)
உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க கத்திரிக்காய் உதவுகிறது. கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


கத்தரிக்காயின் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ராடிக்கல்ஸ்களிடமிருந்து நமது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும்.

கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்கு உடலில் அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது.

கத்திரிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

கத்திரிக்காயில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

கத்தரிக்காயில் வளமான அளவில் நீர்ச்சத்து உள்ளதால், இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வறண்ட சருமம் மற்றும் சருமத்தின் வெடிப்புகளை குணப்படுத்த முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான சத்துக்கள் என்ன தெரியுமா...?