Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாதுளையின் மருத்துவக் குணங்கள்...!!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாதுளையின் மருத்துவக் குணங்கள்...!!
மாதுளம்பழத்திற்கு 'மாதுளங்கம்' என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும்,  உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத்  தருகிறது.
 
மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள்  நிற்கும்.
 
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை  நிறுத்துகிறது.
 
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை குணமாக்குகிறது.
 
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.
 
இதயநோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.
 
தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்  பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
 
மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும். மாதுளம் பட்டைச்சாறு  வயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்...!!